Mukkani

By Karunanidhi, M.
Mukkani

Details

Authors: Karunanidhi, M.
Format: Paperback
GTIN13: 9788199657526
ISBN10: 8199657529
Page Count: 54
Dimensions: 6.0x0.11x9.0
Publisher: Nilan Publishers

Description

இளைஞர் சமுதாயத்திற்கு இன உணர்வையும் தன் மானத்தையும் ஊட்டி, நாட்டின் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்தும் பேருரைகளும் நூல் வடிவில் வெளிவர கழக இளைஞர் அணி எடுத்துக்கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக, 1984 பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் புதுக்கோட்டை, தஞ்சை, பூண்டி ஆகிய இடங்களிலுள்ள கல்லூரிகளில் மாணவ மணிகளிடையே தலைவர் கலைஞர் ஆற்றிய பேருரைகள் முக்கனி'எனும் தலைப்பில் இந்நூல் வடிவில் வெளியிடப் படுகிறது.

மன்னர் கல்லூரி பேரவையின் முத்தமிழ் விழாவின் நிறைவுநாளை இடையிலே சில நாட்கள் ஒத்தி போட வேண்டிய சூழ்நிலை எனக்கும் உங்களுக்கும் ஏற்பட்டு எவ்வளவு நாளானாலும் கவலையில்லை நான் வந்தே தீர வேண்டும் என்று நீங்கள் காட்டிய பேரார்வத்தின் காரண மாக இன்று மாலை இந்த கல்லூரிப் பேரவையின் முத் தமிழ் விழா நிறைவுநாளைக் கொண்டாடுகிற இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.

இங்கே என்னை அறிமுகம் செய்து உரையாற்றிய பேராசிரியர் கருப்பையா, தன்னை, எனது மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டார். என்னை அறிமுகப்படுத் தச் சொன்னால் அவர்

Loading...